முன்னாள் சரவாக் எம்.பி. மேலவைத் தலைவராக நியமனம்

சரவாக் மாநிலத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் Mutang Tagal, நாடாளுமன்ற மேலவையின் புதிய தலைவராக இன்று பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.

Bukit Mas- முன்னாள் எம்.பி. Mutang Tagal, மேலவைத் தலைவராக நியமிக்கப்பட்டது மூலம் சரவா மாநிலத்தில் Dayak பூர்வகுடி இனத்தின் Lun Bawang வம்சாவளியைச் சேர்ந்த முதல் நபர், அந்த உயர் பொறுப்பை ஏற்றுள்ளார்.

மேலவைத் தலைவராக பொறுப்பு வகித்து வந்த முன்னாள் சட்டத்துறை அமைச்சராக Tun Dr Wan Junaidi Tuanku Jaafar, சரவா மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டததைத் தொடர்ந்து காலியாகியுள்ள அப்பொறுப்புக்கு ஒரு வழக்கறிஞரான 69 வயது Mutang Tagal நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலவையின் 20 ஆவது தலைவராக பொறுப்பேற்றுள்ள Mutang Tagal, பதவியேற்பு சடங்கு இன்று பிற்பகலில் நாடாளுமன்ற மேலவையில் நடைபெற்றது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்