கடற்டை மரியாதையுடன் லெப்டனன் த.சிவசுதன் உடல் தகனம்

லுமூட், ஏப்ரல் 25-

பேராக், லுமூட்டில் அரச மலேசிய கடற்படைக்கு சொந்தமான இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதிக்கொண்ட விபத்தில் உயிரிழந்த துணை விமானியான லெப்டனன் சிவசுதன் தஞ்சப்பன் நல்லுடல், இன்று காலை 11.30 மணியளவில் அரச மலேசிய கடற்படையின் முழு மரியாதையுடன் சித்தியாவானில் உள்ள மஞ்சுங் இந்த சபா, சனாதன தர்ம ஆசிரம மின்சுடலையில் தகனம் செய்யப்பட்டது.

31 வயதான Leftenan சிவசுதன் நல்லுடல் தகனம் செய்யப்படுவதற்கு முன்னதாக, சித்தியவான், தாமான் செர்டாங் ஜெயா-வில் உள்ள அவரின் இல்லத்தில் இறுதி சடங்கு நடைபெற்றது.

அரச மலேசிய கடற்படையின் சேவையின் போது தனது இன்னுயிரை நீத்த Leftenan சிவசுதனின் நல்லுடக்கு இறுதி மரியாதை செலுத்தும் வகையில் நங்கூரம் மற்றும் செம்பருத்தி மலரைத் தாங்கிய அரச மலேசிய கடற்படையின் அதிகாரத்துவ கொடியை கடற்படையின் அர்மடா பாராத், துணைத் தளபதி, முதல் நிலை லக்சமனா ஆர்.ஹரிசுந்தர், சடங்குப்பூர்வமாக Leftenan சிவசுதனின் தாயார் 60 வயதுடைய R. பரமேஸ்வரியிடம் ஒப்படைத்தார்.

கடற்படையின் உயர் அதிகாரிகள் பலர், மலர் வளையம் சாற்றி, Leftenan சிவசுதனின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட Leftenan சிவசுதனின் உடலை தாங்கிய பிரேத வண்டி, மஞ்சுங் இந்த சபா, சனாதன தர்ம ஆசிரம மின்சுடலையில் வந்தடைந்த போது, அரச மலேசிய கடற்படையைச் சேர்ந்த 14 அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் இரு மருங்கிலும் அணிவகுத்து நின்றவாறு, Leftenan சிவசுதனின் உடலுக்கு வீர வணக்கம் முழுங்கி, பிரேதப் பெட்டியை பெற்று, மின்சுடலைக்கு சுமந்து சென்றனர்.

மின்சுடலைக்குள் பிரேதப்பெட்டியை அனுப்புவதற்கு முன்னதாக, Leftenan சிவசுதனின் தந்தை / பணி ஓய்வுப்பெற்ற ஒரு முன்னாள் தமிழ் ஆசிரியரான 61 வயது எம். தஞ்சப்பன், / Leftenan சிவசுதன் உடலில் சீருடையில் அணிவிக்கப்பட்டிருந்த கடற்படை சேவைக்காலத்தில் அவர் பெற்ற உயரிய விருதுகளையும் பதக்கங்களையும் அகற்றி, குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைத்து, கண்கலங்கியவாறு காணப்பட்டார். சரியாக பிற்பகல் 12.15 மணியளவில் சிவசுதனின் உடல் தகனம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கில் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள்,அதிகாரிகள் என அதிகமானோர் கலந்து கொண்டு தங்களின் இறுதி மரியாதையை செலுத்தினர்.

ஒரு மருத்துவரான சிவசுதனின் மனைவி டாக்டர் S ஹர்ஷினி, திருமணத்திற்கு பிறகும், பணியிடம் மாற்றம் கிடைக்காமல் பினாங்கில் கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து பணியாற்றி வந்த நிலையில், விபத்து நிகழ்வதற்கு சில தினங்களுக்கு முன்புதான் பணியிட மாற்றம் அனுமதி கிடைத்து, தெலுக் இந்தான், லங்காப் மருத்துவமனையில் பணியாற்றத் தொடங்கியதாக கூறப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்