கடல் வாழ் உயிரினத்தில் விஷம்

போர்டிக்சன், ஏப்ரல் 4 –

போர்ட்டிக்சன் கடற்பகுதியில் பிடிக்கப்படும் கடல் வாழ் உயிரினமான லாலா வகையை சேர்ந்த கிளிஞ்சல்கள் உண்பதற்கு பாதுகாப்பானது அல்ல என்று மீன் வள இலாகாவின் துணை தலைமை இயக்குநர் வான் அஸ்னான் அப்துல்லா இன்று அறிவித்துள்ளார்.

கடல் வாழ் உயிரினங்களில் தீங்கு விளைவிக்கக்கூடிய விஷத்தன்மை கொண்ட பாசிகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சந்தையில் விற்கப்பட்ட கிளிஞ்சல்களை உட்கொண்டு இருக்கலாம் என்று நம்பப்படும் எட்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து போர்டிக்சன் கடற்பகுதி நீர் மற்றும் கிளிஞ்சல்களின் மாதிரியை சோதனை செய்ததில் அவற்றில் விஷத்தன்மை அமிலம் இருப்பது தெரியவந்துள்ளதாக வான் அஸ்னான் தெரிவித்தார். .

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்