கட்டாய வருடாந்திர மருத்துவ பரிசோதனை நிதிச்சுமையை ஏற்படுத்துகிறது

வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டாய வருடாந்திர மருத்துவ பரிசோதனை நிதிச்சுமையை ஏற்படுத்துவதாக முதலாளிகள் கூறுகின்றனர்.

இதுக்குறித்து எந்தவொரு முறையான தகவல்களும் மருத்துவ கட்டண விலை உயர்வு குறித்தும் அவர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும் இத்திட்டம் தொடர்ந்து செயல்பட்டால் ஓர் ஆண்டிற்கு 414 மில்லியன் வெள்ளி கூடுதல் செலவாகும் என்று முதலாளிகள் தெரிவித்தனர்.

இதைப்பற்றி கடந்த ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி Fomema Sdn Bhd – யின் மூலம் அறிவிக்கபட்டதாக மலேசிய முஸ்லீம் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் (Presma) தலைவர் டத்தோ ஜவஹர் அலி தயிப் கான் அறிவித்தார்.

இந்த மருத்துவக் கட்டண உயர்வு, அந்நிய நாட்டவர்களுக்கு வருடாந்திர பரிசோதனைகளின் அவசியத்தை Fomema-வின் இணையத்தளத்தின் வாயிலாக மட்டுமே வர்த்தகர்கள் கண்டறியபட்டதாக ஜவஹர் அலி விளக்கினார்.

புதிய கொள்கை அறிமுகப்படுத்தியதன் நோக்கமும் இதுக்குறித்து தெளிவான தகவல்களையும் அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்த வேண்டும் என்று Jawahar Ali கேட்டுக் கொண்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்