சாலை தடுப்பில் JPJ அதிகாரி காயமடைந்தார்

கிளந்தான், அலாடெமி பெங்அங்குத்தான் ஜாலான் விலாயா தீமோரிற்கு அருகில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட சாலை தடுப்பின் போது பெரோடுவா கன்சில் கார் மோதியதில் சாலை போக்குவரத்து துறையின் அதிகாரி ஒருவர் காயமடைந்தார்.

43 வயதுடைய முகம்மட் அஸ்ரின் அப்துல் வஹாப் கைகளிலும் கால்களிலும் ஏற்பட்ட பலத்த காயங்களினால் அருகில் உள்ள சிகிச்சையகத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக சாலை போக்குவரத்து துறையின் தலைவர் முகம்மட் முசிவாரி அப்துல்லா தெரிவித்தார்.

சாலை தடுப்பின் போது வெளிநாட்டவர் ஓட்டி வந்த கார் வேக கட்டுபாடின்றி வந்ததாகவும் கார் தம் மீது மோதுவதை தடுக்க ஜே.பி.ஜே அதிகாரி காரின் முன் குதித்ததாகவும் தெரியவந்துள்ளது.

சந்தேகிக்கும் நபர் கைது செய்யப்பட்டதுடன் சம்பந்தப்பட்ட கார் வெற்றிகரமாக கைப்பற்றபட்டதாகவும் முகம்மட் மிசுவாரி கூறினார்.

அக்கார் திருடப்பட்டிருக்கலாம் அல்லது சட்டவிரோதமான பொருட்களை அதில் எடுத்து சென்றிருக்கலாம் என்று நம்பப்படுவதாக முகம்மட் மிசுவாரி செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்