கட்டுப்பாட்டை இழந்த வாகனம் கால்வாயில் குப்புற சாய்ந்ததில், இரு பெண்கள் காயமடைந்தனர்.

மஞ்சுங், மே 17-

வடக்கை நோக்கி செல்லும் WCE – மேற்கு கடற்கரை நெடுஞ்சாலையின் 226.1ஆவது கிலோமீட்டரில், கட்டுப்பாட்டை இழந்த புரோட்டான் பெஸோனா வாகனம் ஒன்று, கால்வாயினுள் பாய்ந்து குப்புற சாய்ந்ததில், அதில் பயணித்த இரு பெண்கள் காயமடைந்தனர்.

ஒரு சிறுமி உள்பட இதர இருவர் காயங்களின்றி உயிர்தப்பினர்.

நேற்று மாலையில் நிகழ்ந்த அச்சம்பவத்தில் ஒருவர், வாகனத்தினுள் சிக்கிக்கொண்ட நிலையில், இரவு மணி 7.29 அளவில் தகவல் கிடைத்ததை அடுத்து, தனது தரப்பு சம்பவ இடத்திற்கு விரைந்ததாக, பேராக் தீயணைப்பு மீட்பு துறையின் நடவடிக்கை பிரிவு உதவி இயக்குநர் சபரோட்ஸி நோர் அகமது தெரிவித்தார்.

சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி, வாகனத்தினுள் சிக்குண்டிருந்த பெண் பாதுகாப்பாக வெளியே கொண்டு வரப்பட்டார்.

அதன் பிறகு, சிகிச்சைக்காக அப்பெண் சுகாதார அமைச்சின் பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக, சபரோட்ஸி நோர் அகமது கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்