வங்காளதேச தொழிலாளர்களுக்கு சம்பளத்தை வழங்காமல் ஏமாற்றிய நிறுவனம் மீது சட்டநடவடிக்கை

ஜொகூர், மே 17-

ஜொகூர், பெங்கராங்-ங்கில் இல்லாத வேலை வாய்ப்பை இருப்பதாக கூறி, நாட்டிற்கு அழைத்துவரப்பட்ட 733 வங்காளதேச தொழிலாளர்களுக்கு நிலுவையிலுள்ள 1 மில்லியன் வெள்ளிக்கும் கூடுதலான சம்பளத்தை வழங்காமல் ஏமாற்றிய நிறுவனத்தின் மீது நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது, 45 நாள்களுக்குள் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்கு நிலுவையிலுள்ள சம்பளத்தை வழங்க வேண்டுமென தீபகற்ப மலேசியாவுக்கான ஆட்பலத்துறை உத்தரவை வழங்கியிருந்தது.

அந்த உத்தரவை சம்பந்தப்பட்ட நிறுவனம் கடைப்பிடிக்க தவறியதை அடுத்து, அந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக , மனித வள அமைச்சு அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

1955ஆம் ஆண்டு தொழிலாளர் சட்டத்தின் கீழ், சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது, செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டும் நடவடிக்கையை ஜொகூர் ஆட்பலத்துறை மேற்கொண்டு வருகின்றது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒரு குற்றத்திற்கு 50 ஆயிரம் வெள்ளி என்ற அடிப்படையில் தண்டமும் நிலுவையிலுள்ள சம்பளத்தைச் செலுத்தவும் அந்நிறுவனத்திற்கு தீர்ப்பாக அளிக்கப்படும் சாத்தியம் உள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்