3 லோரிகளை உட்படுத்திய சாலைவிபத்தில்,உடல் சிக்குண்டு ஒருவர் உயிரிழந்தார்

பேராக் , மே 17-

பேராக் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில், இன்று காலையில் நிகழ்ந்த 3 லோரிகளை உட்படுத்திய சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

தெற்கை நோக்கி செல்லும் சாலையின் 367ஆவது கிலோமீட்டரில்,
கோழிகளை ஏற்றி சென்ற லோரி, பழங்களை ஏற்றி வந்த இரு லோரிகள் ஆகியவற்றுக்கிடையே, அந்த விபத்து நிகழ்ந்தது.

விபத்து குறித்த தகவலை பெற்றதை அடுத்து, ஸ்லிம் ரிவேர் தீயணைப்பு மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக, பேராக் தீயணைப்பு மீட்பு துறையின் நடவடிக்கை பிரிவு உதவி இயக்குநர் சபரோட்ஸி நோர் அகமது தெரிவித்தார்.

அதில், கோழிகளை ஏற்றி வந்த லோரியின் ஓட்டுநர், லோரியினுள் சிக்குண்டிருந்த நிலையில், தீயணைப்பு மீட்பு படையினர் சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி அவரை வெளியே கொண்டு வந்தனர்.

ஆயினும், அவர் உயிரிழந்துவிட்டதை, சுகாதார அதிகாரிகள் உறுதிபடுத்தியதைத் தொடர்ந்து, சடலம் மேல்கட்ட நடவடிக்கைக்காக, போலீசிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதர லோரிகளின் ஓட்டுநர்கள், சொற்ப காயங்களுடன் உயிர்தப்பியதாக, சபரோட்ஸி நோர் அகமது கூறினார்.

இதனிடையே, அந்த விபத்து காரணமாக.சுங்காய்-யிலிருந்து ஸ்லிம் ரிவேர்-ருக்கு செல்லும் சாலையில், 13 கிலோமீட்டர் தூரம் வரையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்