கணவனை பேஸ்பால் மட்டையால் அடித்ததாக பெண் மீது குற்றச்சாட்டு

முவார், மே 15-

தனது கணவர் மற்றொரு பெண்ணுடன் உறவில் இருந்ததற்காக அவரை பேஸ்பால் மட்டையால் அடித்து காயம் விளைவித்ததாக இல்லத்தரசி ஒருவர் மூவார் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டார்.

41 வயது லிம் சியோவ் லெங் என்கிற அந்த இல்லத்தரசி நீதிபதி இர்வான் சுவைன்போன் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது அவர் அக்குற்றத்தை ஒப்புக் கொள்ளவில்லை.

குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 10 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது பிரம்படி அல்லது ஏதெனும் இரண்டு தண்டனைகள் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 324 பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் தேதி காலை 9.20 மணியளவில் ஜொகூர், ஜாலான் கிம் கீ -யில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பேஸ்பால் மட்டையை கொண்டு தனது கணவரை தாக்கியதாக அவர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்