13,400 லீட்டர் டீசல் கைப்பற்றப்பட்டது

சபா, மே 15-

சபா, கம்போங் மினின்தோட் – டில் உள்ள ஒரு கடையில் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது டீசலை கடத்திய குற்றத்திற்காக இரு நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

நேற்று பிற்பகல் 2.45 மணியளவில் அவ்விருவர் மானிய விலையில் வழங்கப்பட்டிருந்த டீசலை தவறாக பயன்படுத்தி ஒரு டேங்கரில் ஏற்றிக் கொண்டிருந்ததாக அறியப்படுகிறது.

பொதுமக்களிடமிருந்து கிடைக்க பெற்ற புகாரை தொடர்ந்து சம்பந்தப்பட்ட இடத்தில் மேற்கொள்ளப்பட்ட Op Taring Landai சோதனையின் வாயிலாக சந்தேகிக்கும் நபர்கள் கைது செய்யப்பட்டதாக கடல்சார் போலீஸ் படையின் சபா, நான்காவது பிரதேசத்தின் கமாண்டர் அஹ்மத் ஆரிஃபின் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட இடத்தில் 13,400 லீட்டர் டீசல் கண்டறியப்பட்ட வேளை அதற்கு தொடர்புடைய ஆவணங்களை சமர்பிக்க தவறியதால் அவ்விருவரும் கைது செய்யப்பட்டதாக அஹ்மத் ஆரிஃபின் கூறினார்.

சந்தேகிக்கும் அந்நபர்களிடமிருந்து 184,160 வெள்ளி மதிப்பிலான டேங்கர் லாரி, டொயோட்டா ஹைலக்ஸ் ரக கார் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக அவர் மேலும் தகவல் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்