மதுபோதையில் தேசிய படகு துடுப்பு சவாரி வீராங்கனையை மோதியதாக இந்தியர் மீது குற்றச்சாட்டு

ஜொகூர் பாரு, மே 15-

மதுபோதையில் காரை ஓட்டிச் சென்று தேசிய படகு துடுப்பு சவாரி வீராங்கனையை மோதியதாக ஒரு தொழிற்சாலையின் உதவி மேற்பார்வையாளர் ஒருவர் ஜொகூர் பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டார்.

31 வயது ஆர். தினேஷ் என்கிற அந்த உதவி மேற்பார்வையாளர் மாஜிஸ்திரேட் நூர் ஃபாதீன் முகமது ஃபரித் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது அக்குற்றத்தை அவர் ஒப்புக் கொள்ளவில்லை.

குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 10 ஆண்டுகள் சிறை மற்றும் 50,000 வெள்ளி அபராதம் மற்றும் தண்டனை விதிக்கப்பட்ட நாளிலிருந்து ஏழு ஆண்டுகளுக்கு ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய குற்றவியல் சட்டம் 44 (1a) (b) ஆவது பிரிவின் கீழ் அந்நபர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

கடந்த மே 11 ஆம் தேதி மாலை 4.19 மணியளவில் ஜொகூர் பாரு, லெபுராயா பென்யுரையான் தீமுர் நெடுஞ்சாலையின் 3.5 ஆவது கிலோமீட்டர் தொலைத்தூரத்தில் டொயோட்டா வியோஸ் ரக காரில் பயணித்த அந்நபர் மதுப்போதையில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து தேசிய படகு துடுப்பு சவாரி வீராங்கனையான சித்தி நூருல் மஸியீதா முஹம்மது எலியாஸ் மீது மோதியதாக அவர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்