இஸ்ரேலிய பிரஜைக்கு சட்டவிரோதமாக துப்பாக்கிகளை விற்றதற்காக தம்பதியர் மீது குற்றச்சாட்டு

கோத்தா பாரு, ஏப்ரல் 08-

இஸ்ரேலிய பிரஜைக்கு சட்டவிரோதமாக துப்பாக்கி விற்றதற்காக தம்பதியர் மீது கிள்ளான் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று குற்றச்சாட்டியுள்ளது.

நீதிபதி ஷரிபாஹ் ஹசீண்டி சியேட் ஒமர் முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது ஷரிபாஹ் பார்ஹா சுயேட் ஹுசைன் மற்றும் அவரின் கணவர் அப்துல் அஜிம் மோஹட் யாசின் ஆகியோர் குற்றத்தை ஒப்புக் கொள்ளவில்லை என்று தெரியவந்துள்ளது.

கடந்த மார்ச் 29 ஆம் தேதி இரவு 9 மணியளவில் கோலசிலாங்கூர், கம்போங் புக்கிட் பெலிம்பிங், ஜாலான் ஹாஜி ஒமார் -ரில் உள்ள ஒரு வீட்டில் இக்குற்றத்தை புரிந்திருப்பதாக அவர்கள் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் அவ்விருவருக்கும் சட்டப்படி தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்படுகின்றது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்