தாய்லாந்து பெண் கொலை வழக்கு, மறு விசாரணை ஏப்ரல் 19 ஆம் தேதி

கோலாலம்பூர், ஏப்ரல் 08-

செத்தியா அலாம் , ஆடம்பர அடுக்குமாடி வீட்டின் 23 ஆவது மாடியிலிருந்து தனது தாய்லாந்து காதலியை கீழே தள்ளி கொலை செய்ததாக குற்றச்சாட்டப்பட்டுள்ள லாரி ஓட்டுநரின் மறு விசாரணை வருகின்ற ஏப்ரல் 19 ஆம் தேதி நிர்ணயித்திருப்பதாக தெரியவந்துள்ளது.

மேலே குறிப்பிடப்பட்ட தேதியில் காலை மணி 9 மணியளவில் மாஜிஸ்திரேட் மொஹமட் ரெட்சா அஸ்ஹார் ரெசாலி முன்னிலையில் இதுக்குறித்து மறு விசாரணை மேற்கொள்ளப்படும் என்று 37 வயது வி. நாதன்-னில் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சிவானந்தன் ராகவா கூறினார்.

முன்னதாக, நீதிமன்றம் இவ்வழக்கை ஜூன் 7 ஆம் தேதி நிர்ணயித்திருந்த வேளையில் வழக்கில் புதிய முன்னேற்றங்கள் காணப்பட்டதை தொடர்ந்து புதிய நாளுக்கு மாற்றம் செய்யப்பட்டதாக அவர் அறிவித்தார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 12 பிரம்படிகள் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்