APMM உறுப்பினர்களை சுட்ட நபர்கள் அடையாளம் கண்டுள்ளனர்

சபா, ஏப்ரல் 08-

சபா, குனாக் கடற்கரையில் ஓப் காஸ் பாகார் லாவுட், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனமான MMEA அதிகாரிகள் மீது குண்டு பாய்ந்தது தொடர்பாக மலேசிய காவல்துறை ஒருவரை அடையாளம் கண்டுள்ளது.

சந்தேகிக்கும் நபரை குறித்து மேல் விவரங்களை வெளியிடுவதற்கு போலீஸ் தலைவர் டான் ஸ்ரீ ரசாருதீன் ஹுசைன் மறுத்துவிட்டதாக தெரியவந்துள்ளது.

நோன்பு பெருநாள் பண்டிகையை பயன்படுத்தி கொள்ளையர்கள் இச்சம்பவத்தில் ஈடுபட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக ரசாருதீன் ஹுசைன் கூறினார்.

இது ஒரு கடல் கொள்ளை சம்பவமாக தமது தரப்பு கண்டறிவதாக அவர் குறிப்பிட்டார். பெருநாள் காலங்களில் விடுமுறையை கழிப்பதற்கு பொதுமக்கள் குனாக் – கிலிருந்து செம்ப்போர்னா, செம்ப்போர்னா – விலிருந்து குனாக் -விற்கு செல்வது வழக்கம்.

இந்த வாய்ப்பினை தமக்கு சாதகமாக பயன்படுத்தி சிலர் கடலில் படகுகளை கொள்ளையடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக ரசாருதீன் ஹுசைன் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்