கணேஷ்பரனின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும், அரசாங்கத்திடம் மஇகா பரிந்துரை

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 28-

மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்த்தான் ஷராப்புடின் இட்ரிஸ் ஷாஹ்-வையும், இஸ்லாம் சமயத்தையும் அவமதித்த ஒரு மலேசியப் பிரஜையான கணேஷ்பரன் நடராஜாவின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும் என்று அரசாங்கத்திடம் மஇகா இன்று பரிந்துரை செய்துள்ளது.

தற்போது வெளிநாட்டில் இருப்பதாக கூறப்படும் கணேஷ்பரனின் பேச்சும், நடவடிக்கைகளும் நமது நாட்டின் கூட்டரசு அரசிலமைப்பு சட்டத்தின் கீழ் அவர் நாட்டிற்கு விசுவாசமற்ற நபராக இருப்பதால் அந்த மலேசியப் பிரஜையின் குடியுரிமை உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும் என்று மஇகாவின் இளைஞர் பிரிவுத் தலைவர் தினாலன் ராஜகோபாலு வலியுறுத்தியுள்ளார்.

கணேஷ்பரனின் செயலுக்காக அவரின் மலேசிய கடப்பிதழ் ரத்து செய்யப்பட வேண்டும் என்று கடந்த 2020 ஆம் ஆண்டு மலேசிய குடிநுழைவுத்துறைக்கு புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் கேட்டுக்கொண்டதாக குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் இயக்குநர் டத்தோ ஸ்ரீ மோஹட் ஷுஹைலி நேற்று தெரிவித்த நிலையில், மலேசிய இந்திய காங்கிரஸான மஇகா, கணேஷ்பரனின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும் என்று அரசாங்கத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளது.

சமயத்தையின் மாண்பையும், மக்களின் நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் கணேஷ்பரனை போன்ற நபர்கள் நாட்டிற்கு தொடர்ந்து மிரட்டலாக இருப்பதை அனுமதிக்கக்கூடாது. இப்படிபட்ட நபர்களுக்கு எதிராக அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுத்தாக வேண்டும் மஇகா வலியுறுத்தியுள்ளது..

நாட்டிற்கு விசுவாசமில்லாதவர்கள் மலேசியப் பிரஜைகளாக இருப்பதற்கு தகுதியில்லாதவர்கள், அவர்களின் குடியுரிமையை பறிப்பதே சிறந்த தீர்வாக இருக்க முடியும் என்று மஇகா தகவல் பிரிவுத் தலைவர் தினாளன் ராஜகோபாலு வலியுறுத்தியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்