லாரி ஓட்டுநரிடம் லஞ்சம் பெற்ற மூன்று போலீசார் கைது

ஜொகூர், மார்ச் 28-

ஜொகூர், மெர்சிங் -கில் லாரி ஓட்டுநரிடம் லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக மூன்று காவல்துறை அதிகாரிகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்துள்ளது.

நேற்று இரவு 7 மணியளவில் 36 க்கும் 42 க்கும் வயதிற்கு உட்பட்ட சந்தேகிக்கும் நபர்களை ஜொகூர், எம்.ஏ.சி.சி அலுவலகத்திற்கு சாட்சியமளிக்க வந்தபோது கைது செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பரில் எண்ணெய் பனை மற்றும் உரங்களை ஏற்றிச் சென்ற அந்த லாரி ஓட்டுநரிடம் சம்பந்தப்பட்ட போலீஸ்காரர்கள் 7,800 வெள்ளி லஞ்சம் கேட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட அந்நபர்கள் இன்று காலை 8:30 மணியளவில் ஜொகூர் பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ரிமாண்டிற்காக கொண்டு செல்லப்பட்டதாக ஜொகூர், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் இயக்குநர் அஸ்மி அலியஸ் கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்