MPV வாகனத்தின் டயர் வெடித்து மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்

கம்பார், ஏப்ரல் 11-

தெற்கை நோக்கி செல்லும் PLUS நெடுஞ்சாலையின் 306.1ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்த விபத்தில், MPV வாகனத்தில் பயணித்த மூன்று வங்காளதேச தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுங்காயங்களுக்கு இலக்கானார்.

நேற்று மதியம் 1.49 அளவில் நிகழ்ந்த அந்த விபத்தில், சம்பந்தப்பட்ட MPV வாகனத்தின் பின்னால் உள்ள இடதுபுற டயர் வெடித்ததே விபத்துக்கான காரணம் என கூறப்படுகின்றது.

வேகக் கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம் இடதுபுறத்திலுள்ள சாலை தடுப்பை மோதிய பிறகு, லோரி ஒன்றை மோதி விபத்துக்குள்ளானதாக, கம்பார் போலீஸ் தலைவர் மொஹமட் நஸ்ரி டவுட் தெரிவித்தார்.

MPV ஓட்டுநர் உட்பட அவருடன் பயணித்த இதர மூவர் காயங்களின்றி உயிர் தப்பினர். அவர்கள் அனைவரும் Cameron மலையிலுள்ள ஒரு தோட்டத்தில் வேலை செய்து வந்ததாகவும் கோலாலம்பூருக்கு வந்துகொண்டிருந்த போது, அந்த விபத்து நேர்ந்ததாகவும் மொஹமட் நஸ்ரி டவுட் கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்