கர்ப்பிணி பணியாளருக்கு வெ.66,000 வழங்கப்பட்டது

கோலாலம்பூர் ,பிப்ரவரி 22 –

 முன்னாள் அலுவல உதவி நிர்வாகி ஒருவரை ஆக்கப்பூர்வமாக பணிநீக்கம் செய்யப்பட்டதற்காக தொழில்துறை நீதிமன்றம் 66,000 வெள்ளியை இழப்பீடாக வழங்கியது.

அப்பெண்ணின் கர்ப்ப காலத்தில் அவரை வேலையிலிருந்து நீக்கம் செய்வதற்கு அதன் முதலாளி தொடர்ச்சியாக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்ததால் நீதிமன்றத்தில் இத்தீர்ப்பு வழங்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

மின் மற்றும் தொலைத்தொடர்பு தயாரிப்புகளின் விற்பனையில் ஈடுப்பட்டிருக்கும் புரு ஹாஸ் எஸ்.டி.என் பி.எச்.டி நிறுவனம் பாதிக்கப்பட்ட சூங் சியூ ஃபாங் வை பணியிலிருந்து நிரந்தரமாக நீக்குவதற்கு பல தந்திரங்களையும் திட்டங்களையும் கையாண்டிருப்பதாக விசாரணையில் தெரியவந்ததாக நீதிமன்றத்தின் தலைவர் அகஸ்டின் அந்தோணி கூறினார்.

அந்நிறுவனம் சூங் -கை நேரடியாக பணிநீக்கம் செய்யாமல், அவரின் வேலை ஒப்பந்தத்தின் வாயிலாக தொடர்ந்து பணி செய்யாமல் இருப்பதற்காக இதனை மேற்கொண்டுள்ளார் என்று அகஸ்டின் அந்தோணி அறிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்