குழந்தைகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டால் புகாரளிக்க பயப்பட வேண்டாம்

கோலாலம்பூர், பிப்ரவரி 22 –

மாணவர்களை துஷ்பிரயோகம் செய்யும் கல்வி நிறுவனங்களின் மீது பிள்ளைகளின் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்.

அத்தகைய விதிகளை மீறி செயல்படும் கல்வி நிறுவனங்கள் அல்லது மதரஸா மீது விசாரணை நடத்தப்படும் என்று சட்ட சேவை வழக்கறிஞர் மைய இயக்குநர் மஹ்மூத் ஜுமாட் தெரிவித்தார்.

சமய அறிவை கற்று பயனுள்ள மனிதர்களாக உருவாக வேண்டும் என்பதற்காக பிள்ளைகளை பெற்றோர்கள் மதரஸா தஹ்ஃபிஸ் க்கு அனுப்பும் நம்பிக்கை பாதிப்படைவதாக மஹ்மூத் ஜுமாட் கூறினார்.

இதுபோன்ற நடவடிக்கைகள் பெற்றோர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தருவது மட்டுமின்றி கல்வி பயில வருகின்ற மாணவர்களுக்கும் மிகுந்த மன அழுத்தத்தினை தரவல்லதாகவுள்ளது என்று அவர் விளக்கினார்.

சில மாணவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டு கழிவறைகளில் உறங்குவதாகவும், உடல்ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகவும், பாதுகாப்பற்ற இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆகிய புகாரை அடுத்து இத்திட்டம் மேற்கொள்ளப்படுவதாக மஹ்மூத் ஜுமாட் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்