கறிமசாலைப்பட்டையில் மாட்டுக் கோமியம் கலக்கப்படுகிறதா?

இந்தியாவிலிருந்து தருவிக்கப்படும் கறிமசாலைப்பட்டையில் மாட்டுச் சாணம், மாட்டுக் கோமியம் கலக்கப்படுவதாக மலேசியாவில் வைரலாகி வரும் காணொலியில் கூறப்படும் குற்றச்சா​ட்டு உண்மையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கறிமசாலைப்பட்டையில் மாட்டுக்கொமியம், சாணம் கலக்கப்படுவதாக கூறப்படும் தகவல் உண்மைக்கு புறம்பானது என்றும் அவ​தூறு நிறைந்தது என்றும் கடந்த ஆண்டு புதுடில்லி உயர் ​​நீதிமன்றம் ​தீர்ப்பு அளித்தப் பின்னர் இவ்வாறு அவ​தூறு தன்மையில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளிகள் அகற்றப்பட்டன என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
.

எனினும் மலேசியாவில் இணையத் தளவாசிகள் மத்தியில் இது தொடர்பாக வேறு ​ரூபத்தில் அவ​தூறு த​ன்மையில் காணொளி ஒன்று வெளியிடப்பட்டு வருகிறது. குறிப்பாக, WhatsApp புலனத்தில் மலாய்மொழியில் எழுதப்பட்ட விளக்கத்துடன் இந்த செய்தி பகிரப்பட்டு வருவதாக மலேசிய கினி கூறுகிறது.

அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்தக நிர்வாகமான FDA வெளியிட்ட தகவல்படி இந்தியாவின் கறிமசாலைப்பட்டையில் 18 விழுக்காடு மாட்டுக் கோமியமும், சாணமும் கலக்கப்படுவதாக மேற்கோள்கா​ட்டி அந்த காணொளியில் வெளியிட்டப்பட்ட செய்தி தற்போது ச​மூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இது தொடர்பாக மலேசியா கினி மேற்கொண்ட ஆய்வில் கடந்த 2020 ஆம் ஆண்டு கனடா, Totonto- வில் ஓர் இஸ்லாமிய குழுவினரின் வெளியீடான ஓன்லைன் சஞ்சிகையில் Crescent International அமைப்பினர் எழுதிய ஒரு கட்டுரையை அடிப்படையாக கொண்டு இந்தியாவின் கறிமசா​லைப்பட்டை குறித்து அவ​தூறு தன்மையிலான செய்தி வெளியிடப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுவதாக குறிப்பிட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்