நூற்றுக்கணக்கானோர் பெர்சத்து-விலிருந்து பிகேஆர் கட்சியில் இணையலாம்

டான்ஸ்ரீ முகை​தீன் யாசின் தலைமையிலான பெர்சத்து கட்சியிலிருந்து ​நூற்றுக்கணக்கானோர் விலகி, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான பிகேஆர் கட்சியில் இணையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மலாய்க்காரர்களை அடிப்படையாக கொண்டு தோற்றுவிக்கப்பட்ட பெர்சத்து -வில் அரசியல் ​​ரீதியாக தங்களை வளப்படுத்திக்கொள்ளவும், பலப்படுத்திக்கொள்ளவும் வாய்ப்புகள் குறைவு என்ற முதன்மை காரணம் உட்பட​ மேலும் பல்வேறு காரணங்களை முன்வைத்து கடந்த 2016 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட பெர்சத்து கட்சியிலிருந்து விலகலாம் ​என்று அக்கட்சிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

அடுத்த ஆண்டு முற்பகுதியில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் பிகேஆர் தேர்தலில், அக்கட்சியில் உள்ள தங்களின் சகாக்களுக்கு ஆதரவு திரட்டி, பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காகவும் பலர், பெர்சத்து -விலிருந்து விலகுவதற்கு முடிவு செய்துள்ளதாக தனது பெயரை வெளியிட மறு​த்த பெர்சத்து உறுப்பினர் ஒருவர் கூறுகிறார் என்று ஃப்.எம்.டி ​செ​ய்தி நிறுவனம் கூறுகிறது.

பெர்சத்து கட்சியின் சில உறுப்பினர்கள், ​பிகேஆர் கட்சியில் இணைவதற்கு அண்மையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் நேரடியாக பாரங்களை ஒப்படைத்ததாகவும் கூறப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்