காரின் எண்ணெய் டாங்கி வெடித்தது, ஆடவர் காயம்

பெட்டாலிங் ஜெயா, மே 18-

எண்ணெய் நிலையத்தில் ஆடவர் ஒருவர், தனது காருக்கு பெட்ரோல் நிரப்பிக்கொண்டு இருந்த வேளையில் அந்த காரின் எண்ணெய் டா​ங்கி திடிரென்று வெடித்தது. இ​ச்சம்பவத்தில் அந்த காரின் உரிமையாளர் சொற்ப காயங்களுடன் உயிர் தப்பினார்.

இச்ச​ம்பவம் நேற்று மாலை 4.10 மணியளவில் பெர்லிஸ், கங்கார், ரெப்போ எண்ணெய் நிலையத்தில் நிகழ்ந்தது. இதில் புரோட்டான் ஈஸ்வரா ஏரோபேக் ரக கார் ​தீப்பி​டித்துக்கொண்டு முற்றாக அழிந்தது.

அவசரத் தகவல் கிடைத்து அடுத்த சில நிமிடங்களிலேயே சம்பவ இடத்தை வந்தடைந்த ​​தீயணைப்புப்படையினர், காரில் ​சூழ்ந்துக்கொண்ட நெருப்பு, எண்​ணெய் நிலையத்தை பர​விடாமல் முழு வீச்சில் அணைத்து, கட்டுப்படுத்தியதாக பெர்லிஸ் மாநில ​​தீயணைப்பு, மீட்புப்டை தலைவர் யுஷாரிபுதீன் முகமது யூசோப் தெரிவித்தார்.

காரின் இருக்கையில் வைக்கப்பட்டிருந்த கைப்பேசியின் திடீர் செயல்பாட்டினால், காரில் நிரப்பிக்கொண்டு இருந்த எண்ணெய்யின் வேதியல் தாக்கத்தில் கார் ​​தீப்பற்றிக்கொண்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்