கல்வி அமைச்சரை குறித்த அவதூறு புகாரை போலீசார் விசாரணை

கூச்சிங் , மார்ச் 31 –

வாட்சாப் மற்றும் முகநூல் அகப்பக்கத்தில் வைரலாக பரவலாகி வரும் கல்வி அமைச்சர் பட்லீனா சீடேக் தொடர்பான அவதூறு விவகாரங்கள் குறித்து காவல்துறைக்கு புகார் கிடைக்க பெற்றிருப்பதாக தெரியவந்துள்ளது.

நேற்று மாலை 4.21 மணியளவில் சுங்கை மாவோங் கில் உள்ள காவல் நிலையத்தில் கல்வி அமைச்சரின் அரசியல் செயலாளரான அதிகா ச்யாரியா ஷாஹாருடின் இதுக்கு‌றி‌த்து ஒரு புகார் அளித்திருப்பதாக Sarawak காவல்துறை ஆணையர் டத்துக் மான்சா அதா கூறினார்.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணை ஆவணங்கள் திறக்கப்பட்டு, தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டம் 1998 பிரிவின் 233 – யின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக மான்சா அதா தெளிவுபடுத்தினார்.

முன்னதாக, துரோகம் விவகாரம் தொடர்பாக சமூக ஊடகங்களில் வைரலான காணொளி, ஒருமித்த கருத்துகளுக்கு புறம்பாக எடுக்கப்பட்டதுடன் தனது நற்பெயரையும் நம்பகத்தன்மையும் சீர்குலைக்கும் வகையில் வெளியேற்றப்பட்ட ஒரு தவறான குற்றச்சாட்டு என்று கல்வி அமைச்சர் பட்லீன சீடேக் தெரிவித்திருந்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்