காய்கறிகளின் விலைகளை ஏற்றுவதற்கு காரணங்களைக் கூறும் விவசாயிகள்!

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 20-

தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக காய்கறிகள் உற்பத்தி 40 விழுக்காடு வரையில் பாதிக்கப்படுவதோடு அவற்றின் விலைகள் சந்தையில் கிடுகிடுவென உயரும் சாத்தியம் உள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில், விலை உயர்வை நியாயப்படுத்துவதற்காக, காய்கறிகளை நடுகின்ற விவசாயிகள் சாக்குப்போக்குக் கூறுவதை நிறுத்திக்கொள்ள வேண்டுமென நாட்டின் மிகப் பெரிய பேரங்காடிகளில் ஒன்றான MYDIN-னின் நிர்வாக இயக்குநர் அமிர் அலி மைடின் நினைவுறுத்தினார்.

தோட்டத்தொழில்துறைக்கு அந்நிய தொழிலாளர்களை வேலைக்கு எடுத்துக்கொள்வதற்கு அரசாங்கம் இதற்கு முன்பு அனுமதியளித்துள்ளது. அந்த தொழில்துறைக்கு அந்நிய தொழிலாளர்கள் போதுமான அளவில் இருக்கக்கூடும் என்றாரவர்.

அந்நிய தொழிலாளர்களை வேலைக்கு எடுத்துக்கொள்ளும் 2.0 ஆட்பல மறுசீரமைப்பு திட்டம் இம்மாதம் 31ஆம் தேதியுடன் முடிவுக்கு வருவதாக, உள்துறை அமைச்சர் டத்துக் ஶ்ரீ சைபுடின் னசுதியன் இஸ்மாயில் , கடந்த 8 ஆம் தேதி கூறியதை அடுத்து, காய்கறிகளின் விலை உயரும் என கூறப்படுகின்றது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்