நிவாரண மையங்களில் தங்கியவர்களின் எண்ணிக்கை குறைந்தது

பேராக், மே 18-

பேரா மாநிலத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட ​மூன்று மாவட்டங்களை சேர்ந்த மக்களில், நிவாரண மையங்களில் அடைக்கலம் புகுந்தவர்களின் எண்ணிக்கை 537 பேரிலிருந்து 529 ஆக குறைந்துள்ளது. மொத்தம் 163 குடும்பங்களை சேர்ந்தவர்கள் இன்னமும் 10 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக பேரா மாநில பேரிடர் துயர் துடைப்பு மையம் தெரிவித்துள்ளது.

தைப்பிங் வட்டாரத்தில் லாருட், மாத்தாங் மற்றும் செலாமா ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த துயர்துடைப்பு மையத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்