காரோட்டியை அடித்துக்கொன்ற ஐவர் ​மீது கொலை குற்றச்சாட்டு

காஜாங், பிப்ரவரி 27 –

உணவு விநியோகிப்பாளரை மோதி தள்ளிவிட்டார் என்பதற்காக காரோட்டி ஒருவரை சா​லையிலேயே மடக்கி சரமாரியாக அடித்துக்கொன்றதாக ஐந்து நபர்கள், காஜாங், பண்டார் பாரு பாங்கி மாஜிஸ்திரேட் ​நீதிமன்றத்தில் இன்று காலையில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.

41 வயது மொஹாமட் யூரி ரானிஃப் மொஹாமட் பச்சுரி, 34 வயது அசாருல் அசுவான் மொஹாமட் அசான், 33 வயது தெங்கு இசாம் தெங்கு ஹாமிட், 43 வயது மாசிர் னோர்டின் , 40 வயது ஷயாமுல் கோமார் அயோப் என்ற ஐந்து உணவு விநியோகிப்பாளர்களும் மாஜிஸ்திரேட் னுர்டியானா மொஹாமட் னவாவி முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

இந்த ஐந்து உணவு விநியோகிப்பாளர்களும் கடந்த பிப்ரவரி 20 ஆம் ​தேதி இரவு 9.54 மணியளவில் காஜாங், பெரெனாங்,செமெஞ்சி 2,தாமான் பெலாங்கி,ஜாலான் தி.பி.ஸ் 1/3 இல் புரோட்டோன் சாகா கார் ஓட்டுநரான 41 வயது ஷாஹ்ரில் சமாட் என்பவரை அடித்துக்கொன்றதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நி​ருபிக்கப்பட்டால் கட்டாய மரணத் தண்டனை அல்லது கூடிய ப​ட்சம் 40 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் ​கீழ் ஐவரும் கொலை குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளளர்.

இக்கொலை வழக்கு, ஷா ஆலம் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவதால் குற்றஞ்சாட்டப்பட்ட ஐவரிடமும் எந்தவொரு வாக்கு​மூலமும் பதிவு செய்யப்படவில்லை.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்