கார் தீப்பிடித்து எரிந்ததில் ஆடவர் உயிர் தப்பினார்

சிலாங்கூர், சிம்பாங் லிமா, சுங்கை நிபாஹ் சாலையில் ஆடவர் ஒருவர் ஓட்டிச் சென்ற SUV ரக கார் சட்டென்று தீப்பிடித்து எரிந்தது.

இன்று மாலை 4.02 மணியளவில் கிடைக்கப் பெற்ற அவசர அழைப்பினை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக சிலாங்கூர், மலேசிய தீயணைப்பு, மீட்புத் துறையின் செயல்பாட்டு பிரிவின் உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் மொக்தார் தெரிவித்தார்.

BMW X5 ரக காரில் பயணித்த 46 வயது ஆடவர் காரின் ‘டாஷ்போர்டு’ – டில் இருந்து புகை வருவதை கவனித்து, காரை சாலையோரத்தில் நிறுத்தியுள்ளார்.

அவ்வாடவர் இறங்கிய வேகத்தில் கார் தீப்பிடித்து எரிந்ததாகவும் எந்தவொரு காயமின்றி அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பியதாகவும் அஹ்மத் முக்லிஸ் கூறினார்.

விபத்தில் கார் 95 சதவீதம் தீயில் எரிந்து சாம்பலாகியதாக அஹ்மத் முக்லிஸ் மேலும் விவரித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்