பல்பொருள் உரிமையாளர் ஒருவர் அச்சுறுத்தலுக்கு ஆளாகினார்

கம்போங் பாரு, ஜாலான் ராஜா மூடா மூசாவில் ஒரு பல்பொருள் கடையின் உரிமையாளர் ஒருவரை சந்தேகிக்கும் நபர் பாராங்கினால் தாக்கி அச்சுறுத்த முயற்சித்ததாக தெரியப்படுகிறது.

அந்த கடையின் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காணொளி ஒன்று நேற்று X வலைத்தளத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

அந்த காணொளியில் சந்தேகிக்கும் நபர் சம்பந்தப்பட்ட கடையினுள் நுழைவதையும் பாதிக்கப்பட்டவரை நோக்கி பாராங்கை காட்டுவதையும் காட்டுகிறது.

மேலும், சந்தேகிக்கும் நபர் பலமுறை பாதிக்கப்பட்டவரை தாக்க முயற்சிப்பதாகவும், பாதிக்கப்பட்டவர் வெட்டுக் காயம் ஏற்படுவதை தவிர்ப்பதற்கு போராடியதாகவும் அந்த காணொளியில் பதிவாகியிருந்தது.

இச்சம்பவம் தொடர்பாக, இதுவரையில் போலீஸ் தரப்புக்கு எந்தவொரு புகாருக்கு கிடைக்க பெறவில்லை என்று டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் நூர் டெல்ஹான் யஹாயா தெரிவித்தார்.

இதுக்குறித்து மேல் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக நூர் டெல்ஹான் தகவல் அளித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்