கோவிட் 19 நோய்தொற்று 14.8 விழுக்காடு அதிகரிப்பு

நாட்டில், மே 12 முதல் 18 வரையில் கோவிட் 19 நோய்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,230 ஆகும்.

இது 14.8 சதவீதம் அதிகரித்து இருப்பதாக சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி வரையில் கோவிட்19 – யினால் எவரும் மரணமடையவில்லை என்று சுகாதார அமைச்சகம் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மலேசியா உட்பட உலகளவில் கோவிட் 19 நிலையைக் குறித்து சுகாதார அமைச்சகம் தொடர்ந்து கண்காணித்து வருவதாக அது கூறியுள்ளது.

கடந்த மே 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரையில் சிங்கப்பூரில் கோவிட்- 19 – யினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக அதிகரித்திருப்பதை தொடர்ந்து, சுகாதார அமை‌ச்சக‌ம் நாட்டில் பல பாதுகாப்புகளையும் நடவடிக்கைகளையும் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்