கார் பள்ளத்தில் விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக மூவர் உயிர் தப்பினர்

பாலிங் , ஏப்ரல் 26-

கெடா, ஜாலான் குணுங் இனாஸ்-சில் மூவர் பயணித்த கார் ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் அதிர்ஷ்டவசமாக எந்தவொரு சேதாரமின்றி அம்மூவரும் உயிர் தப்பினர்.

நேற்று மாலை 6.54 மணியளவில் 27 வயது ஆடவர், அவரின் ஏழு மாதக் கர்ப்பிணி மனைவி உட்பட மூன்று வயது ஆண் குழந்தை ஆகியோர் இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டிருப்பதாக தீயணைப்பு, மீட்பு நிலையத்திற்கு புகார் பெறப்பட்டதாக பாலிங் தீயணைப்பு, மீட்பு நிலையத்தின் தலைவர், உதவி தீயணைப்பு கண்காணிப்பாளர் முகமட் ஜாமில் மாட் டாவுட் கூறினார்.

அதை தொடர்ந்து, மூத்த தீயணைப்பு அதிகாரி II ஒஸ்மான் ஆவாங் பெசார் தலைமையிலான ஒன்பது உறுப்பினர்கள் கொண்ட குழு ஒன்று பாலிங் தீயணைப்பு, மீட்பு நிலையத்திலிருந்து சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும், 10 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் ஹோண்டா சிட்டி ரக காரை பாதுகாப்பாக மீட்டதாகவும் முகமட் ஜாமில் தெரிவித்தார்.

அவ்விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி வழங்கப்பட்டதை தொடந்து அம்மூவரும் மேல் சிகிச்சைக்காக பாலிங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்