SPRM விசாரணை வளையத்திற்குள் துன் மகாதீர் தலைமை அணையர் அஸாம் பாக்கி அறிவிப்பு

குவா முசாங், ஏப்ரல் 25-

சொத்து விவரங்கள் அறிவிப்பது தொடர்பில் முன்னாள் பிரதமரான துன் முகாதீர் முகமது, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளார்.

SPRM விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்ட பத்து தனி நபர்களில் துன் மகாதீரும் ஒருவர் ஆவார் என்று SPRM தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அஸாம் பாக்கி தெரி வித்துள்ளார்.

கடந்த 1981 ஆம் ஆண்டு முதல் 2003 ஆ ம் ஆண்டு வரையில் 22 ஆண்டு காலம் நாட்டின் பிரதமராக பொறுப்பேற்று இருந்த துன் மகாதீரின் சொத்து விவரங்களை அறிவிப்பது தொடர்பாக அவர் தற்போது SPRM விசாரணை வளையத்திற்குள் இருப்பதாக அஸாம் பாக்கி விளக்கினார்.

ஏற்கனவே துன் மகாதீரின் இரு புதல்வர்களான மிர்சான் மகாதீர் மற்றும் மொக்ஸானி மகாதீர் ஆகியோர் SPRM விசாரணைக்குள் இருந்து வரும் வேளையில் தற்போது துன் மகாதீரும் SPRM விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

சொத்து விவரங்களை அறிவிப்பதில் தொடர்ந்து கால அவகாசம் கேட்டு விண்ணப்பம் செய்து வரும் துன் மகாதீரின் இரு புதல்வர்களும் 2009ஆம் ஆண்டு SPRM சட்டத்தின் 36 ஆவது விதியின் கீழ் தங்கள் சொத்து விவரங்களை கண்டிப்பாக அறிவித்தாக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அஸாம் பாக்கி விளக்கிானர்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்