வெ.38,600 மதிப்பிலான சட்டவிரோத பட்டாசுகள் பறிமுதல்

பாசிர் மாஸ், ஏப்ரல் 08-

இவ்வாண்டு ஜனவரி தொடக்கத்திலிருந்து நேற்று வரையில் மொத்தம் 38,600 வெள்ளி மதிப்பிலான சட்டவிரோத பட்டாசுகளை கிளந்தான் போலீசார் பறிமுதல் செய்ததாக தெரியவந்துள்ளது.

பாசிர் மாஸ், தும்ப்பாட், மச்சாங், குவா மூசாங் உட்பட பாசிர் புத்தே ஆகிய இடங்களில் இது தொடர்பாக 11 வழக்குகள் பதிவாகியிருப்பதாக கிளந்தான் போலீஸ் தலைவர் டத்தோ முகம்மது  சாக்கி ஹாரூன் கூறினார்.

இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட அந்நபர்கள் உள்ளூர் சப்ளையர் – களிடமிருந்து பொருட்களை பெற்று அதனை சட்டவிரோதமாக விற்பனை செய்யும் சிறு சிறு வணிகர்கள் என்று கண்டறியப்பட்டதாக முகம்மது  சாக்கி விளக்கினார்.

ஐடில்ப்பித்ரி பெருநாள் நெருங்கிவிட்ட போதிலும் கூடுதல் வருமானத்தை பெறுவதற்காக அந்நபர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபடுவதாக முகம்மது  சாக்கி தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்