காலணி விவகாரத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் தரப்பினர்களுக்கு எதிராக எம்.சி.எம்.சி எச்சரிக்கை

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 08-

அரபு மொழியில் ”அல்லா’ என்ற சொல்லை குறிக்கும் காலணி வடிவமைப்பில் சர்ச்சைகுரிய கருத்துக்களை சமூக ஊடகத்தில் வெளியிடுவதற்கு அல்லது பகிர்வதற்கு எதிராக மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான (எம்.சி.எம்.சி) பொதுமக்களை எச்சரித்துள்ளது.

இனம், மதம், அரசக் குடும்பம் தொடர்பான விவகாரத்தை உட்படுத்துகின்ற விஷயங்கள் தொடர்பாக, குறிப்பிடப்பட்ட இணையத்தளத்தின் மூலம் காவல்துறைக்கு புகார் அளிக்குமாறு மொதுமக்களை ஓர் அறிக்கையில் எம்.சி.எம்.சி வலியுறுத்தியுள்ளது.

மக்களிடையே பதற்றத்தை தூண்டக்கூடிய கருத்துக்களை வெளியிட்டு அச்சிக்கலை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் தரப்பினர்கள் ஏதெனும் கண்டறியப்பட்டால் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டம் 1998 -யின் கீழ் தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எம்.சி.எம்.சி சாடியுள்ளது.

இந்த காலணிக்குறித்த குற்றச்சாட்டை விசாரிப்பதற்கு இஸ்லாமிய மேம்பாட்டு துறை மற்றும் இதர அதிகாரிகள் அனுமதிக்கப்பட்டிருக்கும் வேளையில் மற்றவர்கள் பொறுமையுடனும் அமைதியாகவும் இருக்கும்படி எம்.சி.எம்.சி கேட்டுக் கொண்டுள்ளது.

சர்ச்சைக்குறிய காலணியை விற்றதை குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் விசாரணை மேற்கொள்ளுமாறு மத விவகார அமைச்சர் ந’இம் மோக்த்தார், ஜாக்கிம்- மை கேட்டுக் கொண்டதை தொடர்ந்து Vern’s Holding Sdn Bhd நிறுவனமும் அத்தகைய காலணிகளை வெளியிட்டிருந்ததற்கு மன்னிப்பு கோரியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்