காலுறை விவகாரத்தில் அம்னோ-வைவிட PAS கட்சிக்கு புரிந்துணர்வு உள்ளது

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 01 –

அல்லா சொல் கொண்ட காலுறை விற்பனை செய்திருந்த KK மார்ட் நிறுவன கடையை புறக்கணிக்கும் பரப்புரைக்கு ஆதரவு அளிக்கப்படாது என PAS கட்சி நேற்று கூறியிருந்தது.

அந்த பரப்புரையை முன்னெடுத்த அம்னோ-வைக் காட்டிலும் PAS கட்சி, உள்நாட்டு பொருளாதாரம் மற்றும் புவிசார் அரசியலை நன்கு புரிந்திருப்பதாக முன்னாள் அமைச்சர் டத்தோ ஸ்ரீ சயிட் இப்ராஹிம் தெரிவித்தார்.

மலேசிய அரசியலுக்கு ஏற்புடைய வகையிலான நிலைப்பாட்டை PAS கட்சி வெளிப்படுத்தியுள்ளது. மலாய்க்காரர்கள் மற்றும் நாட்டின் நல்வாழ்விற்காக, சீன எதிர்ப்பாளராக இருக்கக்கூடாது என்பதே சரியாகும்.

உள்நாட்டு பொருளாதாரத்தில் சீன சமூகத்தினர் ஒன்றுடன் ஒன்றாக ஒன்றிணைந்துவிட்டனர். இனவாதமும் புறக்கணிப்பு பரப்புரையும் எவ்வித மாற்றங்களைக் கொண்டு வந்துவிடாது. KK மார்ட் கடைகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் புறக்கணிப்பு பரப்புரையால் UMNO பெருமிதம் கொள்ளுமானால், வரக்குடிய தேர்தல்களில் அக்கட்சி இல்லாமலேயே போகும்.

அவர்களின் அச்செயலால் சீன சமூகத்தினர் பாஸ் கட்சியை நோக்கி செல்வதற்கு அது வாய்ப்பாக அமையும் எனவும் டத்தோ ஸ்ரீ சயிட் இப்ராஹிம் கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்