பள்ளி தங்குமிடங்களில் வார்டன்-களாக செயல்பட முன்னாள் இராணுவ வீரர்கள் விருப்பம்

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 01 –

தங்குமிட வசதிகளை கொண்ட பள்ளிகளில், வார்டன் எனப்படும் கண்காணிப்பாளர் பொறுப்புக்கு ஆசிரியர்களுக்கு பதிலாக இதர தரப்பினரை நியமிப்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாக, கல்வி அமைச்சர் பட்லினா சிடேக் கூறியிருந்தார்.

பள்ளி தங்குமிட கண்காணிப்பாளராகும் வாய்ப்பை கல்வி அமைச்சு தங்களுக்கு வழங்க வேண்டுமென முன்னாள் இராணுவ வீரர்கள் சங்கத்தின் தலைவர் ஷாஹ்ருட்டின் ஒமார் கோரிக்கை விடுத்தார்.

பள்ளி மாணவர்களை வழிநடத்துவதற்கு சம்பந்தப்பட்ட முன்னாள் இராணுவ வீரர்கள் ஏற்புடையவர்களாக இருப்பார்கள். இராணுவ வீரர்களாக பணியாற்றிய போது, அத்தரப்பினர் ஒழுக்கத்தை பேணியதோடு, போதிய பயிற்சிகளையும் பெற்றுள்ளனர்.

வார்டன் -களாகும் பொறுப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டால், 40 வயதில் பணி ஓய்வு பெறும் அவர்களுக்கு அதுவொரு இரண்டாவது வேலை வாய்ப்பாக அமையும் என்றாரவர்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்