கால்பந்தாட்டை பார்ப்பதற்கு டிக்கெட் பெற்றதும் அடங்கும்

சிங்கப்பூர் நீதிமன்றத்தில் இன்று தனக்கு எதிராக லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதைத் தொடர்ந்து போக்குவரத்து அமைச்சர் பதவியிலிருந்து விலகியுள்ள சிங்கப்பூர் ஆளும் கட்சியான PAP- யைச் சேர்ந்த S. ஈஸ்வரனுக்கு எதிராக கொண்டு வரபட்ட 27 ஊழல் குற்றச்சாட்டுகளில் கால்பந்தாட்டை பார்ப்பதற்கு தொழில் அதிபரிடமிருந்து டிக்கெட் பெற்றதும் அடங்கும் என்று தெரிவக்கப்பட்டது.

கடந்த 2015ஆம் ஆண்டுக்கும் 2021ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் Arsenal – க்கும், Totteenham Hotspur க்கும் இடையிலான கால்பந்தாட்டம்,/ West ham United- டிற்கும் Everton- க்கும் இடையிலான கால்பந்தாட்டம் / , Chelsea- க்கும் Southampton- க்கும் இடையிலான கால்பந்தாட்டம், / Arsenal – க்கும் Liverpool க்கும் இடையிலான கால்பந்தாட்டம் / மற்றும் Chelsea- க்கும் Manchester City க்கும் இடையிலான கால்பந்தாட்டம் / என உலகத் தரத்திலான 16 கால்பந்தாட்டப் போட்டியை நேரில் காண்பதற்கு சிங்கப்பூர் சொத்துடைமை கோடீஸ்வரர் Ong Beng Seng- கிடமிருந்து டிக்கெட் பெற்றுள்ளார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

2017ஆம் ஆண்டு நடைபெற்ற சிங்கப்பூர் எஃப் 1 கார் பந்தயத்திற்கான 10 கிரீன் ரூம் நுழைவுச்சீட்டுகளை ஈஸ்வரன் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
2018ஆம் ஆண்டு நடைபெற்ற சிங்கப்பூர் எஃப் 1 கார் பந்தயத்திற்கான 13 நுழைவுச்சீட்டுகளை அவர் பெற்றுக்கொண்டதாக நம்பப்படுகிறது. .

தவிர ஈஸ்வரன், வாங்கியதாகக் கூறப்படும் லஞ்சங்களில் Ong Beng Seng கிற்கு சொந்தமான விமானத்தில் சிங்கப்பூரிலிருந்து கத்தார் தலைநகரம் தோஹாவுக்குப் ( DOHA ) பயணம் செய்ததது, தோஹாவில் ( DOHA ) உள்ள ஃபோர் சீசன்ஃஸ் ஹோட்டலில் ஓர் இரவு தங்கியது, DOHA- விலிருந்து சிங்கப்பூருக்கு விமானத்தின் வர்த்தகப் பிரிவில் பயணம் மேற்கொண்டது ஆகியவையும் அடங்கும்.
61 வயதான ஈஸ்வரன், தனக்கு எதிராக 27 குற்றச்சாட்டுகளையும் மறுத்து விசாரணை கோரியிருப்பதால் அவர் சிங்கப்பூர் பணமான 8 லட்சம் வெள்ளி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்