தண்ணீர் கட்டண விலை ஏற்றத்திற்கு புத்ரா ஜெயா அங்கீகாரம்

தீபகற்ப மலேசியா மற்றும் லாபுவான் கூட்டரசுப்பிரதேச மாநிலங்கள் அனைத்தும் தண்ணீர் கட்டணத்தை சராசரி 22 காசுக்கு உயர்த்துவதற்கு புத்ராஜெயா அங்கீகாரம் வழங்கியுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களின் கோரிக்கைக்கு ஏற்ப மத்திய அரசாங்கம் இந்த அங்கீகாரத்தை வழங்கியிருப்பதாக அன்வார் குறிப்பிட்டார். சில மாநிலங்கள் கடந்த 40 ஆண்டு காலமாக தண்ணீர் கட்டணத்தை உயர்த்த வில்லை என்பதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

தீபகற்ப மலேசியா மற்றும் லாபுவான் கூட்டரசு பிரதேச மாநிலங்களில் வரும் பிப்ரவரி முதல் தேதியிலருந்து ஒரு கனமீட்டருக்கு சராசரி 22 காசுக்கு நீர் கட்டணத்தை உயர்த்தியுள்ள ஸ்பான் ( SPAN ) எனப்படும் தேசிய நீர் சேவை ஆணையத்தின் நடவடிக்கை குறித்து அன்வாரிடம் கருத்து கேட்ட போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்