7 வாகனங்கள் விபத்துக்குள்ளாகியதில் இருவர் உயிரிழந்தனர்

கம்போங் தெர்சூசூன் அருகிலுள்ள கோப்பேஙிலிருந்து சிம்பாங் பூலாய்விற்கு செல்லும் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 288 ஆவது கிலோமீட்டரில் மூன்று லாரிகள் உட்பட நான்கு கார்கள் விபத்துக்குள்ளாகியதில் இருவர் உயிரிழந்த வேளையில் அவர்களில் ஒருவருடைய உடல் உறுப்புகள் சிதைந்து காணப்பட்டன.

இவ்விபத்தில் சர்க்கரை லாரி ஓட்டுநரும் உலோகம் ஏற்றிச் சென்ற லாரி ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே உயிழந்ததாக தெரியவந்துள்ளது.

இன்று காலை 7.46 மணியளவில் கிடைக்கபெற்ற அவசர அழைப்பினை தொடர்ந்து சிம்பாங் பூலாய் மற்றும் கோபேங் தீயணைப்பு, மீட்புபடையினர் அவ்விடத்திற்கு விரைந்ததாக பேரா, மலேசிய தீயணைப்பு, மீட்புதுறையின் துணை இயக்குநர் சபரோட்ஸி நோர் அகமது கூறினார்.

விபத்தில் சிக்கி உயிரிழந்த அவ்விருவர்களின் உடல் தீயணைப்பு வீரர்களினால் மீட்டெடுக்கப்பட்டு மேல் நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாக சபரோட்ஸி நார் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்