குடிநுழைவுத்துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது

கம்பங் கங்கர் தெப்ராவ் உட்பட வெளிநாட்டவர்கள் குடியிருக்கும் பகுதிகளை ஜொகூர் மலேசிய குடிநுழைவுத்துறை தொடர்ந்து கண்காணித்து சோதனை மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது.

கடந்த ஜனவரி 16 ஆம் தேதி குறிப்பிடப்பட்ட இடங்களில் நடத்தப்பட்ட திடீர் சோதனையின் போது வெளிநாட்டவர்கள் உட்பட Rohingya பிரஜைகள் விசாரணை செய்யப்பட்டதாக மலேசிய குடிநுழைவுத்துறையின் இயக்குநர் Baharuddin Tahir கூறினார்.

இச்சோதனையின் போது குடிநுழைவு சம்பந்தப்பட்ட ஆவணங்கள் இல்லாதது மற்றும் சட்டவிரோதமாக நீண்ட கால அவகாசத்தில் தங்கியிருந்தது ஆகிய குற்றங்களுக்காக மொத்தம் 73 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக Baharuddin Tahir தெளிவுப்படுத்தினார்.

கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் Rohingya, நேபாள் உட்பட வங்காளதேசம் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் என்று அவர் குறிப்பிட்டார். ஜொகூரில் உள்ள 19 இடங்கள் வெளிநாட்டு பிரஜைகளுக்கு பிரதான ஒரு பகுதியாக இருப்பதை குடிநுழைவுத்துறை கண்டறிந்ததாக Baharuddin Tahir தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட நபர்கள் மீது விசாரணை தொடங்கப்பட்டு வருவதாக Baharuddin Tahir மேலும் அறிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்