குடியுரிமை விவகாரத்தில் 7 சட்டத்திருத்தங்களுக்கு அரசாங்கம் அனுமதி

புத்ராஜெயா, மார்ச் 22.

குடியுரிமை விவகாரம் தொடர்பில் கூட்டரசு அரசியமைப்புச் சட்டத்தில் எட்டு திருத்தங்களை செய்வதற்கு உள்துறை அமைச்சு சமர்ப்பித்த பரிந்துரையில், 7 திருத்தங்களை செய்வதற்கு அரசாங்கம் அனுமதி அளித்துள்ளதாக அதன் அமைச்சர் டத்தோ ஸ்ரீ சய்ப்புடின் நசுட்டின் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டத்தில் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக சைபுடின் குறிப்பிட்டார்.

இந்த உத்தேச திருத்தங்களை செய்வதற்கு முன்மொழிப்படுவதற்கு முன்னதாக அனைத்து தரப்பினரின் கருத்துகளும் கண்டறியப்பட்டதாக அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

அதேவேளையில் இந்த உத்தேச திருத்தங்கள் தொடர்பில் ஒற்றுமை அரசாங்கத்தின் உறுப்புக்கட்சிகளின் தலைவர்களுடனும் பிரதமர் கலந்து ஆலோசித்து இருப்பதாக சைபுடின் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்