மாஸ்கோவில் துப்பாக்கிச் ​சூட்டு சம்பவம் 60 க்கும் மேற்பட்டோர் பலி

மாஸ்கோ, மார்ச் 23.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் க்ராஸ்னகோர்ஸ்க் நகரில் உள்ள க்ரொக்கஸ் சிட்டி அரங்கில் நேற்றிரவு, 6 ஆயிரம் பேர் அமர்ந்திருந்த இசை நிகழ்ச்சியில் மர்ம நபர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 60 க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். 150-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

துப்பாக்கி குண்டுகள் சீறிப் பாயும் சத்தம் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்ததால் உயிருக்கு பயந்து தப்பித்து ஓட பலர் முயற்சி செய்தனர். சிலர் இருக்கைகளுக்கு அடியில் ஒளிந்து கொண்டனர்.

இதில் குண்டடி பட்டு 60 க்கும் மேற்பட்டவ​ர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.

இச்சம்பவ​த்தில் முழு அரங்கமும் தீப்பற்றி எரிந்து சேதமானது. தாக்குதல் நடத்தியவர்கள் யார்? தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களா? என போலீஸ், புலனாய்வு அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சூழலில் இந்த துப்பாக்கிச்​சூட்டு சம்பவம் ரஷ்யாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்