நேபாளிய பாதுகாவலர் நிர்வாகத்தினால் கெளரவிக்கப்பட்டார்

டாமன்சாரா, மார்ச் 22.

டாமன்சாராவில் உள்ள ஒரு பேரங்காடியின் வாகனம் நிறுத்தும் இடத்தில் கைவிடப்பட்டுக் கிடந்த பெட்டிக்குள் 5 லட்சம் வெள்ளி ரொக்கப்பணம் கட்டுக்கட்டாக இருந்ததை கண்டு, அந்தப் பணப் பெட்டி குறித்து உடனடியாக போலீசுக்கு தகவல் அளித்த ஒரு பாதுகாவலரான நேபாளிய பிரஜை, இன்று தாம் பணியாற்றும் நிறுவனத்தினால் கெளரவிக்கப்பட்டார்.

நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் இளஞ்சிவப்பு வெள்ளை நிறத்திலான அந்தப் பெட்டியில் பணம் இருப்பதை கண்டு, 30 வயதுடைய அந்த நேபாளிப் பிரஜை, உடனடியாக போலீசுக்கு தகவல் அளித்து இருப்பது, அவரின் நேர்மையையும், பொறுப்புணர்ச்சியையும் புலப்படுத்துவதாக ஒரு பாதுகாவலர் நிறுவனமான A5 Security Service நிறுவனம் புகழாரம் சூட்டியது.

39 வயது சிகேற்ப டாவா என்ற அந்த பாதுகாவலருக்கு நிறுவனத்தின் இயக்குநர் ஹர்தீப் சிங்க் ஜஸ்வந்த் இன்று விருது வழங்கி கெளரவித்துள்ளார். அந்த பாதுகாவலரின் நேர்மைமிகுந்த செயலுக்காக தங்களின் பாதுகாவலர் நிறுவனம் பெருமைப்படுவதாக அவர் வர்ணித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்