வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கை 2.2 மில்லியன்

கோலாலம்பூர், மார்ச் 26 –

நாட்டில் குடியிருக்கும் மொத்த வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கை 12 ஆவது மலேசிய திட்டத்தின் இலக்கை நெருங்கியிருப்பதாக மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் சீ கியோங் தெரிவித்தார்.

வருகின்ற 2025 ஆம் ஆண்டிற்குள் நாட்டில் அந்நிய தொழிலாளர்களின் எண்ணிக்கை 15 சதவீதத்தை தாண்டக் கூடாது என்று அரசாங்கம் இலக்கு கொண்டிருப்பதாக ஸ்டீவன் சிம் கூறினார்.

மலேசிய குடிநுழைவுத்துறையின் கணக்கின்படி, கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் தேதி வரையில் நாட்டில் பணிபுரியும் மொத்த வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கை 21 லட்சத்து 71 ஆயிரத்து 798 பேர் என்று அறியப்படுவதாக ஸ்டீவன் சிம் விளக்கினார்.

வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கை RMK12- யின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை நெருங்கிவிட்ட நோக்கத்தினால் அந்நிய பணியாளர்களை வரவழைக்கும் புதிய ஒதுக்கீட்டின் ஒப்புதலை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என்று ஸ்டீவன் சிம் நாடாளுமன்றத்தில் இன்று அறிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்