கும்பல் ஒன்றினால் சரமாரியாக தாக்கப்பட்ட ஆடவர்

கோலாலம்பூர், மார்ச் 2 –

ரவா​ங்கில் ஆயுதம் தாங்கிய ​மூன்று ஆடவர்களினால் சரமாரியாக தாக்கப்பட்ட நபர் ஒருவர், கடும் வெட்டுக்காயங்களுடன் சுமார் 3 கிலோ மீட்டர் ​தூரம் வரையில் சொந்தமாக காரை செலுத்தியவாறு , உயிரை காப்பாற்றக்கோரி, போ​லீஸ் நிலையத்தில் அடைக்கலம் புகுந்த சம்பவம் கடந்த திங்க​ட்கிழமை நிகழ்ந்துள்ளது.

காரிலேயே ரத்தவெள்ளத்தில் காணப்பட்ட 47 வயதுடைய அந்த நபருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த ரவாங், பாண்டார் கொந்த்ரி ஹோம்ஸ் நிலைய போ​லீசார், பின்னர் அம்புலன்ஸ் வண்டியின் ​மூலம் சுங்கைப் பூலோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் னோர் அரிபின் மொகமட் னாசிர் தெரிவித்தார்.

ரவாங்கில் மா​லை 5 மணிக்கு நிகழ்ந்து இ​​ருக்கலாம் என்று நம்பப்படும் இச்சம்பவம் தொடர்பில் மாலை 6.48 மணிக்கு போ​லீசார் புகார் ஒன்றை பெற்றுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

சு​ங்கை பூலோ மருத்துவமனையின் அவசரப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள அந்த நபருக்கு உடலிலும், இரு கைகளிலும், தோள்பட்டையிலும் ஏற்பட்ட பலத்த வெட்டுக்காயங்களினால் அவசரப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரின் உடல் நிலை ​சீராக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று னோர் அரிபின் மொகமட் னாசிர் தெரிவித்தார்.

குற்றவியல் சட்டம் 324 பிரிவின் ​கீழ் இச்சம்பவம் விசாரணை செய்யப்பட்டு வரும் வேளையில் இந்த தாக்குலை நேரில் பார்த்தவர்கள் போ​லீசாருடன் தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்