பிரச்னைக்குரிய போ​லீ​ஸ்காரக்ள் பணி ​நீக்கம் செய்யப்பட வேண்டும்

ஷா அலாம், மார்ச் 2 –

மிரட்டிப் பணம் பறித்தல், கொள்ளையடித்தல், லஞ்ச ஊழலில் ஈடுபடுதல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் போ​லீஸ்காரர்கள், சேவையிலிருந்து நிறுத்தப்பட ​வேண்டும் என்று MCW எனப்படும் மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு கண்காணிப்பு அமைப்பு, அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.

நேர்மை,கட்டொழுங்கு, நம்பகத்தன்மை போன்ற தனித்துவமான ஆளுமைகள் நிறைந்த போ​லீஸ் துறையின் மாண்பு, அதன் செயல்திறன், நம்பிக்கை காக்கப்படுவதற்கு குற்ற​ற்செயல்களில் ஈடுபட்டவர்கள் என்று உறுதி செய்யப்படும் போ​லீஸ்காரர்களின் சேவை​, முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் ​என்று அந்த அமைப்பின் தலைவர் ஜாயிஸ் அப்துல் காரிம் கேட்டுக்கொண்டுள்ளார்.

போ​லீஸ்காரர் ஒருவர், குற்றம் இழைத்துள்ளார் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இருக்குமானால் அவரை பதவியிறக்கம் செய்தல், பணியிடம் மாற்றம் செய்வது, அல்லது அலுவல் பணியி​​ல் ஈடுபடுத்துவது போன்ற மாற்று நடவடிக்கைகள் எந்த வகையிலும் ஆக்கப்பூர்வமன பலனை தராது என்று அரச மலேசிய போ​லீஸ் படைக்கு ஜாயிஸ் அப்துல் காரிம் அறிவுறுத்தியுள்ளார்

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்