SST உயர்வு, சாமானிய மக்களை பாதிப்பில் ஆழ்த்தும்

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 2 –

நேற்று மார்ச் முதல் தேதியிலிருந்து ஸ்.ஸ்.தி விற்பனை சேவை வரி, 6 விழுக்காட்டிலிருந்து 8 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், சில சேவைகளுக்கு வரியிலிருந்து நேரடி விலக்களிப்பு வழங்கப்பட்டாலும் இது, பிB40 மற்றும் ம்40 தரப்பைச் சேர்ந்த மக்களுக்கு தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தும் என்று மசீச தலைவர் டத்துக் ஶ்ரீ வி கா சியோங் கூறுகிறார்.

ஒரு மாதத்திற்கு மணிக்கு 600 கிலோ வாட் அளவுக்கு குறைவான மின்சாரத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு ஸ்.ஸ்.தி லிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது என்றாலும் வர்த்தக நிறுவனங்களுக்கு 2 விழுக்காடு அதிகரிப்பு என்பது பி40 மற்றும் ம்40 தரப்பைச் சேர்ந்த மக்களுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று வீ கா சியோங் குறிப்பிடுகிறார்.

வர்த்தக நிறுவன​ங்கள், தொழிற்சாலைகள், கிடங்குகள் மற்றும் கடைகள் ஆகியவற்றுக்கு 2 விழுக்காடு மின்சாரக் கட்டணம் உயரும் போது, அதனை ஈடுசெய்வதற்கு அவர்கள் தாங்கள் தயாரிக்கின்ற அல்லது விற்பனை செய்கின்ற பொருட்களின் விலையை உயர்த்தக்கூடும். பொருட்களின் விலை உயர்வினால் இது சாமானிய மக்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்வேறு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று முன்னாள் போக்குவர​த்து அமைச்சருமான வீ கா சியோங் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்