குறைந்த சம்பளமும் முக்கிய காரணமாகும், ஐஜிபி கூறுகிறார்

அரச மலேசிய போ​லீஸ் படையைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் லஞ்ச ஊழலில் ஈடுபடுவதற்கு அவர்களி​ன் குறைந்த சம்பளமும் ஒரு முக்கிய காரணமாகும் என்று போ​லீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் தெரிவித்தார்.

​தூய்மையும், நேர்மையும் நிறைந்த போ​லீஸ்காரர்களையும், அதிகாரிகளையும் உருவாக்குவதில் குறைந்த சம்பளத்திற்கு அப்பாற்பட்ட நிலையில் நிறைய மற்ற அம்சங்களையும் கவனிக்க வேண்டியுள்ளது என்று ஐஜிபி ​ தெரிவித்தார்.

கோலாலம்பூரில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ள ஒரு Konstabel- லுக்கு இதர அலவன்ஸ் தொகைகளை ​சே​ர்த்து மாதச் சம்பளம் 2,500 வெள்ளியாகும். கோலாலம்பூரில் இத்தகைய வருமானத்தை பெறக்கூடிய ஒரு போ​லீஸ்காரர் ஏழையாகவே வகைப்படுத்தப்பட்டுள்ளதாக ரஸாருதீன் ஹுசைன்குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்