முன்னாள் போலீஸ் அதிகாரிக்கு 33 ஆண்டுகள் சிறை, பிரம்படி விதிக்கப்பட்டுள்ளது

புத்ராஜெயா, மே 15-

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, தனது மனைவியை துப்பாக்கினால் சுட்டுக் கொலை செய்த குற்றத்திற்காக முன்னாள் போலீஸ் அதிகாரி ஒருவருக்கு வழங்கப்பட்டிருந்த மரண தண்டனையை 33 ஆண்டுகள் சிறைத்தண்டனையாக மாற்றியமைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற அப்பீல் நீதிமன்ற நீதிபதி டத்தோ ரவீந்திரன் என். பரமகுரு, குற்றச்சாட்டப்பட்டிருக்கும் சோஃபியன் அபு ஹாசன் – னுக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு கூச்சிங் உயர்நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையை ஒருமனதாக ரத்து செய்தார்.

குற்றச்சாட்டப்பட்டிருக்கும் அந்த அதிகாரிக்கு 33 ஆண்டுகள் சிறையும் 12 பிரம்படியும் விதிக்க நீதிமன்றம் மேலும் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கில் போதுமான ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் அந்நபரை மரண தண்டனையிலிருந்து விடுவித்து, சிறை தண்டனை வழங்கியதாக தெரியப்படுகிறது.

கடந்த 2017 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி மாலை 3.15 மணியளவில் சரவாக், செரியான் அருகே 33 வயது சித்தி நத்ரா அப்துல்லா என்கிற அவரின் மனைவியை கழுத்தில் சுட்டுக் கொலை செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்