குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு கவலையளிக்கிறது

சமீபத்தில் 55 லட்ச மலேசியக் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு கவலையளிக்கும் நிலையை உள்ளது எனவும், மேலவையில் இவ்விவகாரம் குறுத்து விவாதிக்கப்பட்டதாகவும் செனட்டர் டாக்டர் ஆர்.ஏ.லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, 5 வயதுக்குட்பட்ட சுமார் 55 லட்ச மலேசிய குழந்தைகள் வளர்ச்சி குன்றியதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மலேசியாவின் புள்ளிவிவரத் துறையின் மக்கள்தொகைத் தரவுகளுடன் ஒப்பிடுகயில், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையில் 21 விழுக்காட்டினர் வளர்ச்சி குன்றியதாக மதிப்பிடப்பட்டதாக லிங்கேஸ்வரன் குறிப்பிட்டார்.

மிக அதிகமாக, பகாங் மாநிலத்தில் 44.8 சதவிகிதம் வளர்ச்சி குன்றிய நிலையில் குழந்தைகள் இருப்பதாக, சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கெடா, கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா ஆகிய மாநிலங்களில் 24.3 சதவிகிதம் குழந்தைகள் பாதிக்கப்பட்டதாகவும் லிங்கேஸ்வரன் சொன்னார்.

குழந்தைகள் வளரும் பருவத்தில் வளர்ச்சி குன்றியிருப்பதும், உடல் எடை குறைவதும் அவர்களின் மூளை வளர்ச்சியை பாதிக்கும் என்பதை நாம் அனைவரும் அறிந்திருப்பதால், இந்தப் பிரச்சினை உடனடியாக கவனிக்கப்பட வேண்டும் எனவும் லிங்கேஸ்வரன் வலியுறுத்தினார்.

இவ்விவகாரத்தில் மலேசியா இரட்டைச் சுமையின் அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது. முதலாவது, வளர்ச்சி குன்றிய நிலை. மற்றொன்று உடல் பருமன். இது பொதுவாக குழந்தைகள் சரியான உணவை உண்ணாததாலோ அல்லது சரியான உணவுகளை போதுமான அளவு சாப்பிடாததாலோ ஏற்படுகிறது என்றார் அவர்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்