துன் அப்துல் தைப் மஹ்மூத் சொத்துக்கள் முடக்கப்பட வேண்டும்

கோலாலம்பூர், பிப்ரவரி 22 –

நேற்று தமது 87 ஆவது வயதில் மரணம் அடைந்த சவராக் மாநில முன்னாள் ஆளுநர் துன் அப்துல் தைப் மஹ்மூத் சொத்துக்கள் உடனடியாக முடக்ககப்பட வேண்டும் என்று சுவிட்சர்லாந்து தை தளமாக கொண்ட ஓர் அரசாங்க சார்ப்பற்ற அமைப்பான பி.ம்.ஃப் எனப்படும் புருனோ மேன்சர் ஃபன்ட் கேட்டுக்கொண்டுள்ளது.

அதேவேளையில் சரவா மாநிலத்தின் நீண்ட கால முதலமைச்சராக பதவி வகித்தவருாமன தைப் மஹ்மூத் மற்றும் அவரின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் கொண்டுள்ள வழக்கத்திற்கு மாறான சொத்துக் குவிப்புகள் குறித்து அரசாங்கமும், நீதித்துறையும் மீண்டும் விசாரணையை தொடங்க வேண்டும் என்று அந்த தன்னார்வ அமைப்பின் நிர்வாக இயக்குநர் லூகாஸ் ஸ்ட்ராமன் கேட்டுக்கொண்டுள்ளார்.

அரசியல் காரணங்களுக்காக கடந்த 2016 ஆம் ஆண்டு மூடப்பட்ட தைப் மஹ்மூத் டின் சொத்துக்கள் மீதான விசாரணையை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான ஸ்.பி.ர்.ம் மீண்டும் தொடங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

தைப் மஹ்மூத் ப்பின் அனைத்து தனிப்பட்ட வங்கிக் கணக்குள் மற்றும் பிற சொத்துக்கள் அனைத்தும் உடனடியாக முடக்கப்பட வேண்டும். இது குடும்ப உறுப்பினர்களால் சட்டவிரோதமாக சம்பாதிக்கப்பட்டவையாகும் என்று லூகாஸ் ஸ்ட்ராமன் குற்றஞ்சாட்டியுள்ளார்.


பி.ம்.ஃப் என்ற அந்த அமைப்பு நீண்ட காலமாகவேதைப் தைப் மஹ்மூத் டைப் பற்றி கடுமையாக விமர்சித்து வருகிறது. அந்த முன்னாள் சரவா முதலமைச்சரின் குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்புடைய வழக்கத்திற்கு மாறான சொத்து குவிப்புகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் பற்றி அது ஒரு புத்தகத்தையே எழுதி வெளியிட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்